search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன பிரசாரம்"

    • வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட விளக்க பிரச்சார ஊர்தி பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட விளக்க பிரச்சார ஊர்தி பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக கபிலர்மலை ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய கவுன்சிலரும், அட்மா மேலாண்மை குழு தலைவருமான சண்முகம் கலந்து கொண்டு கொடி அசைத்து உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட பிரசார வாகனத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோத்தகிரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4½ லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

    அரவேணு:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோத்தகிரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க மாநில துணை தலைவர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.

    மாநில பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட தலைவர் சலீம், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். பிரசாரத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

    சாலை பணியாளர்களின் பணி நீக்க காலத்தை பணி வரன் முறை செய்ய வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை போல மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

    பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4½ லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் பணி சுமை அவலநிலை குறித்து விளக்கினார்

    ×